#BREAKING: நிலக்கரி தட்டுப்பாடு – உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!
நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை.
நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மின்துறை அமைச்சர் ஆர்கே சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நிலக்கரி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த நிலையில், நிலக்கரி உற்பத்தி, விநியோகம், இருப்பு உள்ளிட்டவை குறித்து உள்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.