லடாக் எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனை.
கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும், இந்திய கட்டுப்பாட்டுக்குள்ள 4 கிலோ மீட்டர் வரை உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்காலிக கூடாரங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கும் குழிகள் போன்றவை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை சீன ராணுவம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இந்தியா சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையான வீரர்களை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. எல்லையில் சீனா வீரர்களைக் குவித்து வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இந்தியா- சீனா படைகள் குவிக்கப்பட்டதால் 73 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…