புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நிதித்துறை பொறுப்பில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
2021-2022-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் ரங்கசாமி அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, செப்டம்பர் 3-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தமிழிசையின் பட்ஜெட் உரைக்கு சட்டப்பேரவையில் நாளை நன்றி தெரிவிக்கப்பட உள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…