#BREAKING : காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்களும் உடன் உள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சோனியாகாந்தி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பானது மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சரான பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சோனியாகாந்தி அவர்களை முதல்முறையாக சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.