#BREAKING : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு, மேகதாது அணை பிரச்சனை குறித்தும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக குடியரசு தலைவரை சந்திக்கிறார். இந்த சந்திப்பானது மரியாதையின் நிமித்தமான சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.