#BREAKING : பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

பிரதமர் அலுவலகம் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை தொடர்ந்து, டெல்லியில் தயாராகும் திமுக அலுவலகத்தை ஆய்வு செய்த பின், சாணக்கியாபுரத்தில் இருக்கக் கூடிய தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு வந்தடைந்தார். தமிழக தலைமையை செயலாளர், சிறப்பு பிரதிநிதி விஜயன், திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், திமுகவை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் அலுவலகம் புறப்பட்டார்.