நந்திகிராம் தொகுதியில் மம்தா பாணர்ஜி வெற்றி பெரிதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சுவேந்த அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 213 இடங்களிலும், பாஜக 78 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 0, மற்றவை 1 என முன்னிலை வகித்து வருகிறது.
இது கிட்டத்தட்ட மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் முதல்வர் ஆகிறது உறுதி செயய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் 52815 வாக்குகளும், சுவேந்து அதிகாரி 62677 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய குளறுபடிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் நான் நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததாக செய்திகள் கிடைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் எனில் சின்ன தோல்விகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.நந்திகிராம் தொகுதி முடிவுகளைப் பற்றி கவலை இல்லை, மக்களின் முடிவை மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்,
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…