#BREAKING: நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்-3 விண்கலம்..!
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையைப் படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. அதன்படி, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
இதனையடுத்து சந்திரயான்-3 ஆகஸ்ட் 5-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைகிறது என்று இஸ்ரோ தெரிவித்தது. அதன்படி, நேற்று விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. பிறகு, லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) அதாவது, சந்திரயான்-3 விண்கலம் இன்று இரவு 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
அதன்படி, தற்போது சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மிஷன் ஆபரேஷன் காம்ப்ளக்ஸ் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ,அடுத்த செயல்பாடு – சுற்றுப்பாதையின் குறைப்பு – ஆகஸ்ட் 6, 2023 அன்று சுமார் 23:00 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நிலவை சுற்றி வந்த பின் ஆக.23ல் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குகிறது.
Chandrayaan-3 Mission:
“MOX, ISTRAC, this is Chandrayaan-3. I am feeling lunar gravity ????”
????Chandrayaan-3 has been successfully inserted into the lunar orbit.
A retro-burning at the Perilune was commanded from the Mission Operations Complex (MOX), ISTRAC, Bengaluru.
The next… pic.twitter.com/6T5acwiEGb
— ISRO (@isro) August 5, 2023