#BREAKING: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் சந்திரசூட்!
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி, உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் டி.ஒய்.சந்திரசூட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை படி, 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை 2 ஆண்டுகள் சந்திரசூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதிவில் இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பரிந்துரை கடிதத்தை நீதிபதிகள் முன்னிலையில் டி.ஒய்.சந்திரசூட்டிடம் தலைமை நீதிபதி யு.யு.லலித் வழங்கினார். இதனிடைய, டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் 16-வது தலைமை நீதிபதியாக 7 ஆண்டுகள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.