#Breaking:மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

Default Image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவோவாக்ஸ்,கார்பேவாக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும் மற்றும் மோல்னுபிராவிர் மருந்து ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ் & கார்பேவாக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு  அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

“மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ),கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ் & கார்பேவாக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

கார்பேவாக்ஸ் தடுப்பூசி என்பது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-E நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட RBD புரத துணை அலகு தடுப்பூசி ஆகும்.தற்போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட 3-வது தடுப்பூசி இதுவாகும்.

அதே சமயம்,நானோ துகள்கள் தடுப்பூசி கோவோவாக்ஸ்(COVOVAX), புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்டது.மேலும்,மோல்னுபிராவிர்,ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகும்.இது தற்போது நாட்டில் 13 நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்து.இது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வயது வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்