மத்திய அரசு புதுச்சேரியின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 10-ஆம் தேதி புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டமானது ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. அதன் பின் ஆளுநர் உரையை வாசித்ததையடுத்து பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.
பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தராததால் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு புதுச்சேரியின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ரூ.11,000 கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில், ரூ.10,696 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள பட்ஜெட்டின் மதிப்பு கடந்த ஆண்டு விட ரூ.280 கோடி அதிகமாகும். புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…