சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ தேர்வுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் நேரடியாக தொலைக்காட்சி மூலம் தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு ஜூலை 26ம் தேதியும், JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…