CBSE +2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்..? என்ற ஒரு கேள்வியை நீதிபதிகள் எழுப்பினார்.
அதற்கு, அடுத்த இரண்டு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுத்து விடுவோம் எனக் கூறி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுங்கள் ஆனால் அவை கொள்கை முடிவாக இருக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை வரும் வியாழக்கிழமை ஒத்திவைத்தனர்.
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…