#BREAKING: ஆன்லைனில் வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு..!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் E voting எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்க கோரியும், ஆன்லைனில் வாக்களிக்கும் நபர் கட்டாயம் நேரில் வர வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.