#Breaking:இலவசங்களுக்கு தடைகோரி வழக்கு – பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி:அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக இலவசம் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றன.இதனால்,நிதிச்சுமை மக்கள் தலையில்தான் விழுகின்றன.எனவே,இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில்,இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும் என்றும்,தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு,தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக மத்திய அரசுக்கும்,தேர்தல் ஆணையதுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Supreme Court issues notice to the Centre and Election Commission of India seeking direction to seize election symbols and deregister political parties that promised to distribute irrational freebies from public funds.
— ANI (@ANI) January 25, 2022