#BREAKING: பிரிட்டனுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து – ஏர் இந்தியா
வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனுக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா எதிரொலி காரணமாக ஏப்ரல் 24 முதல் 30 வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டனுக்கான அனைத்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வரவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் ரெட் லிஸ்ட் பட்டியலில் இந்தியாவை பிரிட்டன் சேர்ந்திருந்தது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் நாட்டவர் இந்தியா செல்ல வேண்டாம் என ஏற்கனவே பிரிட்டன் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.