#BREAKING: CBSE தேர்வு ரத்து செய்யமுடியுமா..? உச்சநீதிமன்றம் .!
சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் + 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை மாதம் நடத்தப்பட உள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா..? என்பதை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்சி நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.