#BREAKING: சீனாவுடன் எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை- ராஜ்நாத் சிங்..!

சீனாவுடன் எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2 -வது நாளாக மக்களவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியது.
இந்நிலையில், இன்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இப்போது வரை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் இல்லை. எல்லையில் சீனா உடன்படவில்லை என தெரிவித்தார்.