சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு..! சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!
சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 20 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன.
பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி, 9.93% வாக்குகள் பதிவாகியுள்ளது.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகள் கண்காணிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் தொண்டமார்கா பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடித்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்துள்ளார். சத்தீஸ்கரில் 20 சட்டமன்ற தொகுதியில் முதற்கட்ட தேர்தல் நடந்துவர நிலையில் குண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.