கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றனர்.இதை தொடர்ந்து காங்கிரஸ் ,தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.
அந்த மனுவில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யவும் , நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியது.
அதில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மை இல்லை என கூறி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதன் பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரியை சந்தித்து கொடுத்தார்.இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் மாளிகையில் சபாநாயகராக பதவியேற்க உள்ளார்.இவர் நாளை எம்எல்ஏகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என தெரிகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…