#BREAKING: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா!

Default Image

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.

பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அளிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் நிதிஷ் குமார். பீகார் ஆளுநர் பகு சவுகானிடம் பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். பீகார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.(யு) தலைவர் நிதிஷ்குமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில், அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்களும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் என்று  தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் கட்சியுடன் சேர்ந்து பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐஜத 45, ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 12 எம்எல்ஏக்கள் சேர்த்து புதிய கூட்டணிக்கு சுமார் 160 உறுப்பினர்கள் உள்ளனர். பீகாரில் மொத்தமுள்ள 243 எம்எல்ஏக்களில் சுமார் 160 பேரின் ஆதரவு ஐஜத, ஆர்ஜேடி கூட்டணிக்கு உள்ளது. பாஜகவுக்கு பீகார் சட்டப்பேரவையில் 77 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம், 2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, தற்போதைய பீகார் அரசியல் களம், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்