#Breaking:பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்ற பகவத் மான்!
முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஆம் ஆத்மி வெற்றி:
இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.மேலும்,இந்த தேர்தலில்,பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.
ராஜ்பவனில் அல்ல;பகத்சிங் பிறந்த ஊரில்தான்:
இதனையடுத்து,தேர்தல் வெற்றி குறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்;ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
முதல்வராக பதவியேற்ற பகவத் மான் :
இந்த நிலையில்,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் தற்போது பதவியேற்றுள்ளார்.சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெறும் நிலையில்,பகவத் மானுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
Bhagwant Mann takes oath as the Chief Minister of Punjab in Khatkar Kalan. pic.twitter.com/LRJjwUVT8S
— ANI (@ANI) March 16, 2022
இவ்விழாவில் டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்கள்,ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Bhagwant Mann sworn-in as the Chief Minister of Punjab, in Khatkar Kalan. pic.twitter.com/mrRVRNX9ab
— ANI (@ANI) March 16, 2022
மஞ்சள் நிற தலைப்பாகை;துப்பட்டா:
இதனிடையே,இந்த பதவியேற்பு விழாவிற்கு வரும் ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை கட்டி வரவேண்டும் என்றும்,பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி,விழாவிற்கு வருகை புரிந்துள்ள ஆண்கள் அனைவரும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்துள்ளனர்.மேலும்,பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்தும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.