#BREAKING : பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்
பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில், கொரோனா காரணமாக சிக்னல், மார்க்கெட், பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமனற நீதிபதிகள், பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதை உயர்வர்க்க கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவிரும்பவில்லை. தடை செய்வதைவிட பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது தான் தற்போதையை மிக முக்கிய தேவை. சிக்கனல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு வழங்கு உயர்கல்வி தர முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.