#BREAKING : கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் பசவராஜ் பொம்மை…!

Default Image

கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் பசவராஜ் பொம்மை.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார். பாஜகவை பொருத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் எடியூரப்பா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பதாகவே இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பின் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்படி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா அவர்கள் ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக நேற்று பெங்களூரில்  கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் கிசான் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பசவராஜ் பொம்மை அவர்களை முதலமைச்சராக தேர்வு செய்தனர். அதன்படி இன்று கர்நாடகாவின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை (61) பதவியேற்றுள்ளார். இவருக்கு, ராஜ்பவனில் ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். பசவராஜ் பொம்மை எடியூரப்பாவின் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஹெச்.டி.தேவகவுடாவின் மகன் எச்.டி.குமாரசாமி முதல்வராக பதவி வகித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்