#BREAKING : இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு…! 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைவு..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 871 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,08,58,241 ஆக உள்ளது.
- இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,51,209 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 15,677 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,08,58,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 871 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,93,198 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 3,35,939 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,83,60,710 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 1,01,278 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 1,65,04,87,260 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 56,72,766 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.