இந்தியா

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்..! அமலாக்கத்துறை அதிரடி..!

Published by
லீனா

கனரா வங்கி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் புகார் அளித்தது. இதனை எடுத்து இந்த புகார் தொடர்பாக இந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா உட்பட ஐந்து பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நரேஷ் கோயல் கைது செய்யப்பட்ட நிலையில்,  நீதிமன்ற காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், நேற்று மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நரேஷ் கோயலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து தற்போது,  ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.538 கோடி  சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பண பரிமாற்ற தடுப்பு திட்டத்தின் கீழ் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 17 அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்தியா துபாய் லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

1 hour ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

1 hour ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

3 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

3 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

4 hours ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

4 hours ago