குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக டிச.1 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 5 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 10 முதல் 17 வரை நடைபெறும்.
டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான மனுதாக்கல் முடிவு நவம்பர் 14-ஆம் தேதியும், வேட்புமனு பரிசீலினை 15-ஆம் தேதியும், வேட்புமனு திரும்ப பெற நவம்பர் 17-ஆம் தேதியும் ஆகும். இதுபோன்று, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் முடிவு நவம்பர் 17-ஆம் தேதியும், வேட்புமனு பரிசீலினை 18-ஆம் தேதியும், வேட்புமனு திரும்ப பெற நவம்பர் 21-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே பேசிய தலைமை தேர்தல் ஆணையர், குஜராத் சட்டசபை தேர்தலில் 3,24,422 புதிய வாக்காளர்கள் இம்முறை முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். 182 தொகுதிகளில் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குஜராத் தேர்தலுக்காக மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் தரைதளத்திலேயே அமைக்கப்படும்.
மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் 50% வாக்குச்சாவடிகளில் இணையதள ஒளிபரப்பு ஏற்பாடுகள் இருக்கும். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள், முதியவர்கள், பொதுப்பணித் தொழிலாளர்களுக்கான அணுகல் மற்றும் சேர்க்கைக்கான சிறப்பு பார்வையாளராக ஈடுபடுத்தப்படுவார். 1274 வாக்குச் சாவடிகள் பெண்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும்.
182 வாக்குச் சாவடிகளில் ஒன்று பொதுப்பணித் துறையால் வரவேற்கப்படும். முதல் முறையாக, 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் மற்றும் இளம் வாக்குச்சாவடி ஊழியர்களால் நிர்வகிக்கப்படும். சட்டப்பேரவை தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயராக உள்ளது. ஒரே ஒரு வாக்காளர் உள்ள பகுதியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…