#BREAKING: 6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கனா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோத்ரநாத் (உத்ரப்ரதேசம்) மற்றும் தாம்நகர் (ஒடிசா) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 14-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் நாள் அக்.17-ஆம் தேதியும், நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நவம்பர் 6-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.