#LIVE: 5 மாநிலங்களின் முன்னிலை நிலவரம் நேரலை இதோ;3 மணி நிலவரப்படி மீண்டும் பினராயி
3:25-மீண்டும் பினராயி |கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மதியம் 3 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 93 இடங்களில் முன்னனியில் உள்ளது.
2:18-ட்விட்டரில் ஸ்டாலின்|வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது.
வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். #Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும். pic.twitter.com/Lp9Lb8LkNp
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
1:52-வாழ்த்துக்கள் மம்தா|ஷரத் பவார் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் அழைத்து இது ஒரு “மகத்தான வெற்றி” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1:43-புதுச்சேரியில் பாஜகவின் ஏ நமசிவயம் வெற்றி பெற்றுள்ளார். உப்பலத்தில் திமுக வேட்பாளர் அனிபால் வெற்றி.
1:33:எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுங்கள்|தேர்தல் வெற்றியை கொண்டாடினால் உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடவும் தேர்தல் ஆணையம் அனைத்து 5 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
Election Commission of India writes to Chief Secretaries of all States/UTs to “prohibit victory celebrations urgently”. ECI also directs that responsible SHOs and other officers must be suspended immediately and criminal and disciplinary actions must be initiated against them pic.twitter.com/4aEydSH42P
— ANI (@ANI) May 2, 2021
1:18-கமல்ஹாசன் முன்னிலை |கோயம்புத்தூர் தெற்கு சட்டசபை தொகுதியில் எம்.என்.எம் வேட்பாளர் கமல்ஹாசன் 2715 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்
1:03-வெற்றி பாதையில் இடதுசாரி| கேரளாவில் ‘மாஸ்’ காட்டும் பினராயி விஜயன் பெரும்பாலான இடங்களில் இடதுசாரி முன்னிலை இடதுசாரி கூட்டணி: 93,காங்கிரஸ் கூட்டணி:44 பாஜக: 03,மற்றவை: 0
12:41-மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திரிணாமூல் காங்கிரஸ்? நந்திகிராம் தொகுதியில் மம்தா முன்னிலை!!
நந்திகிராம் தொகுதியில் மம்தா முன்னிலை!!#MamataBanerjee | #WestBengalElections2021 | #WestBengalElection2021 | #WestBengalPolls pic.twitter.com/KtuTWWvzn8
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 2, 2021
12:02 PM:என்.ஆர் காங்கிரஸ் முன்னிலை |புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் ஆறு இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் பாஜக மூன்றில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக ஆகியோர் தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
11:53 AM :பாஜக ஆட்சியமைக்கும் |வருகின்ற முடிவுகளின் படி, அசாமில் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பது தெளிவாகிறது- முதல்வர் சர்பானந்தா சோனோவாலில்.
As per the trends, it is clear that Bharatiya Janata Party will form the government in Assam: Assam CM Sarbananda Sonowal#Assam pic.twitter.com/EuxHnucmtD
— ANI (@ANI) May 2, 2021
11:45:கென்னடி வெற்றி|புதுச்சேரியில் திமுகவின் முதல் வெற்றி, உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட அனிபால் கென்னடி வெற்றி
11:40:சைலஜா டீச்சர்|மட்டனுர் தொகுதியில் சி.பி.ஐ.எம் கட்சி வேட்பாளர் கே.கே.சைலஜா டீச்சர் முன்னிலை
10:55 :விஜய் வசந்த்|கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
10:40 :திரிணாமூல் முன்னிலை|மேற்கு வங்கம் 292 தொகுதியில் 172 தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.பாஜக 114 தொகுதியில் முன்னிலை காங்கிரஸ், சிபிஎம் கூட்டணி 2 இடங்களிலும் மற்றவைகள் 3 முன்னிலையில் உள்ளது.
10:19 :பாஜக முன்னிலை|அசாமில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 126 தொகுதிகளில் பாஜக 83 தொகுதிகளில் முன்னிலை வகித்து உள்ளது.
காங்கிரஸ் அணி 42 இடங்களிலும், அசாம் ஜாதியா பரிஷத் கட்சி 0, மற்ற காட்சிகள் 1 இடங்களிலும் முன்னணி வகித்து வருகிறது. 64 தொகுதிகள் பெரும்பான்மை பெரும் காட்சி தான் வெற்றி வாகை சூடும்
தமிழகம் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது.
இந்நிலையில், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணப்படவுள்ளது.