#BREAKING: சிறார்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க விண்ணப்பம் – ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்!

12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களிடம் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம்.
கொரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்துக்கு Central Drugs Standard Control Organisation (CDSCO) விண்ணப்பித்துள்ளது.
இதனிடையே, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒரு டோஸ் போடும் வகையில் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவரச கால பயன்பாட்டிற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது பரிசோதிக்க அந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025