கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்தது.இதனால் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதை தொடந்து ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை இரண்டு நாள்கள் முன் உச்சநீதிமன்றத்தில் வந்தது.அப்போது சிதம்பரம் ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வழக்கின் விசாரணை வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரி இருந்தது.
இதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி கொடுத்து உள்ளது.அதன் படி நாளையும் ,நாளை மறுநாளும் விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…