உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இந்தியர்கள் அனைவரும் வெளியேறுங்க என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், போர் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், இதனை பயன்படுத்தி அங்கிருந்து வெளியேற உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் விமானம் மூலம் தொடர்ந்து தாயகம் அழைத்துவரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…