#Breaking:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மைனுல் ஹக் ராஜினாமா..!
5 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்த மைனுல் ஹக் தனது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான (ஏஐசிசி) மைனுல் ஹக்,தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக,அவர் கில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:”
“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியில் இருந்து எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன் என்பதை நான் மரியாதையுடன் தெரிவிக்கிறேன். ஐஎன்சி கட்சி குறிப்பாக சோனியா காந்தி ஜி மற்றும் ராகுல் காந்தி ஜி ஆகியோரின் கௌரவத்தையும், ஏஐசிசியின் செயலாளராக மதிப்புமிக்க பதவியையும் ,மேலும்,பல்வேறு பதவிகளையும் வழங்கியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கட்சி ஐந்து (5) முறை ஃபாரக்கா சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக பரிந்துரைத்தது. இந்நிலையில்,ஐஎன்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன்.
நீங்கள் என் ராஜினாமா மற்றும் கடமையை வழங்கினால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,அவர் செப்டம்பர் 23 அன்று திரிணாமுல் காங்கிரஸில் (TMC) இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.