#Breaking: ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்பு பள்ளிகளும் திறப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது அம்மாநில அரசு.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு தடை நீடித்து வருகிறது. சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கும் போது, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும், இதனை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.