#BREAKING : டெல்லியில் காற்று மாசு – அரசு அலுவலர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க உத்தரவு..!

Default Image

காற்று மாசை தடுக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி : சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஒன்றாக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்து, சமூக ஆர்வலர் ஆதித்ய துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா  ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான  அமர்வு விசாரித்தது.

அப்போது டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.  காற்று மாசு தடுக்க டெல்லியில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 மேலும், காற்று மாசு அதிகரித்திருப்பதை அவசரகால நிலை என்று கூறலாம். கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசுகள் வெடிக்க பட்டது என்பதை கவனித்தீர்களா? பொதுமக்கள் வீடுகளுக்குள் கூட மாஸ்க் அணிந்து செயல்படும் அளவிற்கு மிக மோசமான நிலையில் காற்றின் தரம் உள்ளது. எனவே அரசு உடனடியாக காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்திற்கு பின், சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,

  • காற்று மாசை தடுக்கும் வண்ணம்,  திங்கள்கிழமை முதல் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒருவாரத்திற்கு மூடப்பட்டிருக்கும்.
  • டெல்லியிலுள்ள அரசு ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்வார்கள்.
  • வீட்டில் இருந்தே தனியார் அலுவலகங்கள் வேலை செய்ய ஆலோசனை வழங்கப்படும்.
  • தனியார் வாகனங்களை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
  • திங்கள்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நகரில் கட்டுமானப் பணிகள் மூடப்படும்.

 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்