#Breaking:காற்று மாசுபாடு…3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கலாமா? – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு நிரந்தர தீர்வு தேவை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும்,டெல்லி அரசாங்கம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், மாசுபாட்டை சமாளிக்கக்கூடிய அளவில் வைத்திருக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
காற்று மாசுபாட்டைக் குறைக்க பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயார் என்று டெல்லி அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில்,தற்போது அதற்கு நிரந்த தீர்வு தேவைப்படுவதாகவும்,3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.அதில்,”பயிர்க்கழிவுகளை எரிப்பதால் 10% மட்டுமே காற்று மாசுபடுகிறது என்று கூறி,டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களை இயக்க தடை விதிக்கலாம்,வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் ,திறந்த வெளியில் கழிவுகளை எரிப்பதை தடுத்து நிறுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,”இவை நீண்டகால யோசனை,ஆனால் காற்று மாசுபாட்டை குறைக்க எங்களுக்கு தேவை உடனடியான யோசனை மற்றும் நடவடிக்கையே,அந்த வகையில் டெல்லியில் ஒரு வாரத்திற்கு பொதுமுடக்கம் மற்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கலாம்”,என்று கூறியுள்ளனர்.குறிப்பாக, டெல்லியில் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை நாளை மாலைக்குள் அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.