#BREAKING: ஆப்கானிஸ்தானுக்கு விரைந்தது ஏர் இந்தியா விமானம்!!

Default Image

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே தாயகம் திரும்பும் என தகவல்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, இன்று மாலை 7 முதல் 8 மணிக்குள் அந்த விமானம் டெல்லி வந்துவிடும் என கூறப்படுகிறது. விமானத்தில் அனைத்து இருக்கைகளையும் நிரப்பப்பட்டு, முடிந்தவரை எத்தனை பேரை விமானத்தில் ஏற்ற முடியுமா, அத்தனை பேரையும் அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் வான் வழிகளில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், வரக்கூடிய பாதை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த ஒரு விமானம் மட்டுமல்லாமல், வரக்கூடிய இரண்டு, மூன்று நாட்களுக்கு அங்க இருக்கக்கூடிய இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு, மேலும் விமானங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் தலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். தலிபான் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்