#Breaking:உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம்- AICTE உத்தரவு

Default Image

உக்ரைன்-ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வி-சிக்களுக்கும், ஏஐசிடிஇ-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,உக்ரைனில் இருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை நாடாளுமன்றத்தில் கூட எழுப்பப்பட்டதாகவும், இதனால்,அவர்களை பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் AICTE உத்தரவிட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்