#Breaking:வேளாண் சட்டம் ரத்து-பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதலா?..!
டெல்லி:3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களது போராட்டம் 300 நாட்களுக்கு மேலாக தொடர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாகவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித்தார்.
இதனை அடுத்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்,3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும்,இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.