மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மைக் உடைத்து , விதி புத்தகம் கிழித்து எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், மீண்டும் அவை கூடிய நிலையில், அப்போதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அமளிக்கு மத்தியில் மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மாநிலங்களவையில் விவசாயிகள், வேளாண் விளைபொருட்கள் குறித்த சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய பின்னர், மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த அத்தனை தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…