#Breaking:நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 9,216 பேர் கொரோனாவால் பாதிப்பு;391 பேர் இறப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 391 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,803 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,46,06,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 391 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,70,115 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,612 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,45,666 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,976 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 1,25,75,05,514 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 73,67,230 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025