#BREAKING: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!!
மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.
பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட் (இடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனிடையே, இன்று மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிரிக்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அமளியை தொடரும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், மாநிலங்களவையை முடக்கும் எம்பிக்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெங்கையா நாயுடு எச்சரிக்கையை மீறி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி செய்ததால் தற்போது 6 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தோலா சென், நதிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.