#BREAKING: 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி!
6-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல்.
இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI (Drugs Controller General of India) ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்க கூடிய நிலையில், தற்போது அவசர கால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவை பொறுத்தளவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கோர்பெவாக்ஸ் என்ற தடுப்பூசியும், இதுபோன்று 12 வயதினருக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது சிறார்களுக்கும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.