#BREAKING: புதுச்சேரியில் குழந்தை உட்பட மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!
புதுச்சேரில் குழந்தை உட்பட மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி என அம்மாநில சுகாதாரத்துறை தகவல்.
புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் ஒரு குழந்தை உள்பட 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 15 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் என, பல வகையான காய்ச்சல்களால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் புதுச்சேரியிலும் பன்றி காய்ச்சலால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.