#BREAKING: இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாடு முழுவதும் மேலும் 6 விமான நிலைய நிர்வாகத்தை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.
அதில் , விமானப் போக்குவரத்து செலவீனங்களை ரூ.1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உள்ளது.சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுவதன் மூலம் விமான பயணிகளுக்கு விமான கட்டணங்கள் குறையும். விமானத்துறையில் பராமரிப்பு, பழுது பார்த்தல் நடைமுறைகள் பெரிய தொழில் வாய்ப்புகளை கொண்டுள்ளன.
விமானங்கள் பராமரிப்பு பழுது பார்க்கும் மையமாக இந்தியா உருவாகும். விமான பழுது மற்றும் பராமரிப்பு துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 2000 கோடி புழங்கும் இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதால் 13 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.