#Breaking : தொழிற்பூங்காக்கள் அமைக்க இந்தியா முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் இடம் தேர்வு – நிர்மலா சீதாராமன்

தொழிற்பூங்காக்கள் அமைக்க இந்தியா முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தார்.இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.அதில் , நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும் என்று கூறினார். தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025