#BREAKING: 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் – பிரதமர் மோடி உத்தரவு
பொது விநியோக திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படும் என பிரதமர் மோடி உத்தரவு.
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.26,000 கோடி செலவில் இலவச உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டியிருக்கும் சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச தானியங்கள் விநியோகம் செய்யப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.