#BREAKING : கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
- கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது.
இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில், கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் வெண்டிலேட்டர், மாஸ்க், பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றிற்க்கான வரிகளும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான 5% ஜிஎஸ்டி வரி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.