#BREAKING: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று!
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்.
டெல்லி நாடாளுமன்ற ஊழியர்கள் 1,409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4-ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியான ஊழியர்களின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.