நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் இருந்து மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட 4 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே மக்களவை மற்றும் மாநிலநக்கலவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று அதே சூழல் தான் மக்களவை கூடிய போது ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது, தொடர் முழக்கங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலை தொடர்ந்ததையடுத்து, அவை ஒத்திவைக்கப்ட்டு 2 மணியளவில் மீண்டும் தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 பேரை மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தீர்மானம் கொடுக்கப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 4 மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ள கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் இருந்து மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட 4 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…